இந்த பிரச்சனைய சரி செய்ய வாய்ப்பே இல்லை... சென்னை அணியில் இருக்கும் பிரச்சனையே இது தான்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !! 1

தோனியை தவிர்த்து சென்னை அணிக்கு வேறு ஒரு கேப்டனை நியமிப்பது என்பது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்து ஜடேஜாவின் தலைமையின் கீழ் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜாவின் கேப்டன்சியில் 8 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி, தோல்வியை விட ஜடேஜா உள்பட சென்னை அணியின் பெரும்பாலான வீரர்கள் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டனர், அதே போல் கடந்த தொடர்களில் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா, நடப்பு தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. கேப்டன்சி அழுத்தமே ஜடேஜாவின் சொதப்பல் ஆட்டத்திற்கு காரணம் என பேசப்பட்ட நிலையில், ஜடேஜா கடந்த சில தினங்களுக்கு கேப்டன் பதவியில் இருந்து விலகினார், இதனால் சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது.

இந்த பிரச்சனைய சரி செய்ய வாய்ப்பே இல்லை... சென்னை அணியில் இருக்கும் பிரச்சனையே இது தான்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !! 2

தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது சென்னை ரசிகர்கள் மத்தியிலும், தோனி ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றாலும் இந்த சம்பவம் சென்னை அணி நிர்வாகத்தில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோனியை தவிர்த்து சென்னை அணியை வழிநடத்த வேறு ஆளே இல்லையா..? என்ற இக்கட்டான நிலையில் சென்னை அணி நிர்வாகம் பரிதவித்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமித்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்தும், சென்னை அணிக்கு மாற்று கேப்டன் நியமித்தால் ஏற்படும் குழப்பம் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வீரர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்த பிரச்சனைய சரி செய்ய வாய்ப்பே இல்லை... சென்னை அணியில் இருக்கும் பிரச்சனையே இது தான்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !! 3

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணி குறித்தும் சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்தும் தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

அதில்,“தோனி போன்ற ஒரு கேப்டன் ஒரு அணியை வழிநடத்தினால் அந்த அணிக்கு மாற்று கேப்டன் நியமிப்பது என்பது மிகப்பெரும் கடினம், தோனியை மாற்றி வேறொரு கேப்டன் நியமிப்பது சென்னை அணிக்கு மிகப்பெரும் கடினமான முடிவாகும்,என்னை பொறுத்த வரையில் ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் என்றால் அது சென்னை அணியின் கேப்டன் தோனிதான்.

Leave a comment

Your email address will not be published.