இனி எந்த பிரயோஜனமும் இல்லை... அடுத்த தொடரில் மும்பை அணி இவரை கழட்டிவிடும்; முன்னாள் வீரர் உறுதி !! 1

2023 ஐபிஎல் தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்குமா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா விளக்கமாக பேசியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

 

இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோன்று தனது அணிக்கு முக்கியம் என்று கருதி அணியில் தக்க வைக்கப் பட்ட வீரர்கள் சிலரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இதனால் ஒவ்வொரு அணியும் செய்வதறியாது தினரிக்கொண்டுள்ளனர்.இனி எந்த பிரயோஜனமும் இல்லை... அடுத்த தொடரில் மும்பை அணி இவரை கழட்டிவிடும்; முன்னாள் வீரர் உறுதி !! 2

நம்பிக்கையை வீணடித்த பொல்லார்ட்….

அந்த வரிசையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்டின் மீது அதிக நம்பிக்கை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது, ஆனால் இவர் 2022 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இதனால் தொடரின பாதியிலேயே இவரை ஆடும் லெவனிலிருந்து மும்பை அணி நீக்கியது.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த கூடிய திறமை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிரன் பொல்லார்ட் , இந்த வருட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதால் இவரை 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணி நீக்கிவிடும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இனி எந்த பிரயோஜனமும் இல்லை... அடுத்த தொடரில் மும்பை அணி இவரை கழட்டிவிடும்; முன்னாள் வீரர் உறுதி !! 3

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வல்லுனருமான ஆகாஷ் சோப்ரா மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டை நீக்காது என்று தனது யூடியூப் சேனலில் விளக்கமாக பேசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நிலைபாடு குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா,“மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் 6 கோடி ரூபாய் கொடுத்து பொல்லார்டை தனது அணியில் தக்க வைக்க வில்லை என்றால் இவரை 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணி நீக்கியிருக்கும், ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய நிலைப்பாடு முருகன் அஸ்வின் (1.6 கோடி), டைம் மில்ஸ்(1.5 கோடி) போன்ற வீரர்களுக்கு bye -bye சொல்ல திட்டமிட்டிருக்கிறது என்பது தான், உநாத்கட் குறித்து எனக்கு தெரியவில்லை என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *