சென்னை,மும்பை வீரர்கள் ஒருவர் கூட இல்லை,2022 ஐபிஎல் தொடரின் மாசான ஆடும் லெவன் இவுங்கதான் ; நிகில் சோப்ரா தேர்தெடுத்த சிறந்த வீரர்கள் !! 1

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நிகில் சோப்ரா நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டன.

 

சென்னை,மும்பை வீரர்கள் ஒருவர் கூட இல்லை,2022 ஐபிஎல் தொடரின் மாசான ஆடும் லெவன் இவுங்கதான் ; நிகில் சோப்ரா தேர்தெடுத்த சிறந்த வீரர்கள் !! 2

 

15வது தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட நெடுந்தொடராக நடத்தப்பட்டது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் மற்ற அனைத்து அணிகளையும் விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

 

இரண்டு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் தற்போது நிறைவடைந்துள்ளதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் பலர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் நடந்த முடிந்த ஐபிஎல் தொடருக்கான தங்களது சிறந்த ஆடும் லெவனையும் முன்னாள் வீரர்கள் பலர் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

சென்னை,மும்பை வீரர்கள் ஒருவர் கூட இல்லை,2022 ஐபிஎல் தொடரின் மாசான ஆடும் லெவன் இவுங்கதான் ; நிகில் சோப்ரா தேர்தெடுத்த சிறந்த வீரர்கள் !! 3

அந்தவகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நிக்கில் சோப்ரா 15வது ஐபிஎல் தொடருக்கான தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

நிகில் சோப்ரா தனது ஆடும் லெவனின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளார்,மேலும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை தேர்ந்தெடுத்துள்ளார்.

துவக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ள நிகில் சோப்ரா மிடில் ஆர்டரில் ராகுல் த்ரிபாட்டி, டேவிட் மில்லர் மற்றும் தினேஷ் கார்த்திக்(wk) ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

சென்னை,மும்பை வீரர்கள் ஒருவர் கூட இல்லை,2022 ஐபிஎல் தொடரின் மாசான ஆடும் லெவன் இவுங்கதான் ; நிகில் சோப்ரா தேர்தெடுத்த சிறந்த வீரர்கள் !! 4

ஆல் ரவுண்டர்கான் அன்றே ரசல் மற்றும் ரசீத் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ள நிகில் சோப்ரா, பந்துவீச்சாளர்களாக அர்ஷ்திப் சிங், முகமது ஷமி மற்றும் சஹால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

நிகில் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;

ஜாஸ் பட்லர், டேவிட் வார்னர், ராகுல் த்ரிபாட்டி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அன்றே ரசல், ரசீத் கான், அர்ஷ்திப் சிங்க், முகமது ஷமி, சஹால்.

தலைமை பயிற்சியாளர்; ஆஷிஷ் நெஹ்ரா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *