விராட் கோலி கிடையாது, இவர் ஒரு தந்திரமான கேப்டன்; விளக்கமளித்த தினேஷ் கார்த்திக் !! 1

பெங்களூரு அணியின் கேப்டன் டூப்லஸ்ஸிஸ் வளர்ந்து வந்த விதம் ஒரு நல்ல கேப்டனுக்கான தகுதியை கொடுத்துள்ளது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடந்த தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

விராட் கோலி கிடையாது, இவர் ஒரு தந்திரமான கேப்டன்; விளக்கமளித்த தினேஷ் கார்த்திக் !! 2

இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல் மறுபுறம் இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள், எதிர்வரும் தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், பெங்களூர் அணியின் கேப்டன் டூப்லஸ்ஸிஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

விராட் கோலி கிடையாது, இவர் ஒரு தந்திரமான கேப்டன்; விளக்கமளித்த தினேஷ் கார்த்திக் !! 3

அதில் பேசிய தினேஷ் கார்த்திக், டூப்லஸ்ஸிஸ் ஒரு வீரராக இதுவரை தான் கடந்துவந்த கிரிக்கெட் பயணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொண்டார், இது ஒரு நல்ல கேப்டனுக்கான பண்பாகும், இதனால் இவருக்கு மற்ற வீரர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பது குறித்தும், போட்டி நிலைமை குறித்தும் நன்றாகவே தெரியும். டூப்லஸ்ஸிஸ் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன், டூப்லஸ்ஸிஸ் ஒரு தந்திரமான சிறந்த கேப்டன், அவருடைய உத்திகள் மற்றும் தந்திரங்கள் ஐபிஎல் போட்டியில் நமது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும், மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணியின் அதிக தலைமைத்துவம் உள்ள வீரர்கள் உள்ளனர். குறிப்பாக மேக்ஸ்வெல் ஒரு அணியை வழிநடத்தியுள்ளார், அதேபோன்று ஹர்ஷல் படேல், ஹரியானா அணியை வழி நடத்தியுள்ளார் என்று தினேஷ் கார்த்திக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.