ஜடேஜாவுக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்ல... ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஜடேஜா வழிநடத்த முடியாததற்கான காரணத்தை விளக்கி கூறிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

நடப்பு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்து ஜடேஜாவின் தலைமையின் கீழ் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜாவின் கேப்டன்சியில் 8 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி, தோல்வியை விட ஜடேஜா உள்பட சென்னை அணியின் பெரும்பாலான வீரர்கள் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டனர், அதே போல் கடந்த தொடர்களில் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா, நடப்பு தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. கேப்டன்சி அழுத்தமே ஜடேஜாவின் சொதப்பல் ஆட்டத்திற்கு காரணம் என பேசப்பட்ட நிலையில், ஜடேஜா கடந்த சில தினங்களுக்கு கேப்டன் பதவியில் இருந்து விலகினார், இதனால் சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது.

ஜடேஜாவுக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்ல... ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 2

தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது சென்னை ரசிகர்கள் மத்தியிலும், தோனி ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றாலும் இந்த சம்பவம் சென்னை அணி நிர்வாகத்தில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் கேப்டனாக அனுபவமே இல்லாத ஜடேஜாவை சென்னை அணியின் கேப்டனாக நியமித்தார்கள், ஏன் மற்ற தகுதியான வீரரை கேப்டன் ஆக்கவில்லை என்பது குறித்தான விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டாலும்,சென்னை அணியை ஏன் ஜடேஜாவால் திறம்பட வழிநடத்த முடியவில்லை, ஜடேஜாவிற்கு பதில் வேறு ஒருவரை கேப்டனாக்கினால் எப்படி இருந்திருக்கும், சென்னை அணிக்கு மாற்று கேப்டன் நியமித்தால் ஏற்படும் குழப்பம் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் விளக்கமாக பேசி வருகின்றனர்.

அந்த வரிசையில் ஜடேஜாவால் ஏன் கேப்டன் பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியுள்ளார்.

ஜடேஜாவுக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்ல... ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 3

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஜடேஜா இயற்கையாகவே கேப்டன் கிடையாது, அவர் எந்த ஒரு போட்டியிலும் கேப்டன் பணி செய்தது கிடையாது, அதனால் அவரிடம் கேப்டன் பதவியை கொடுத்தது சற்று கடினமான ஒன்றுதான், மக்கள் அனைவரும் ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்தனர் ஆனால் இது ஜடேஜாவின் தவறு கிடையாது, அவர் கேப்டன் பணியை செய்ததே கிடையாது. அவருடைய நிலையை பார்க்கும் பொழுது தண்ணீரிலிருந்து வெளியே விழுந்த மீன்போல உள்ளது, அவர் ஒரு வீரராக சிறப்பாக செயல் படலாம் ஆனால் ஒரு கேப்டனாக முடியாது இதனால் அவர் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும், ஒருவர் சதம் அடிக்கிறார் அல்லது சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக மட்டுமே அவரை அணியின் கேப்டனாக்க முடியாது, கேப்டன் ஆக வேண்டும் என்றால் அதற்கு அணியை புரிந்துகொண்டு அணியின் வீரர்களை புரிந்துகொண்டு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முடிவெடுக்க தெரிந்தவரே ஒரு நல்ல கேப்டனாக முடியும், என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *