எங்களுக்கு இவர்கள் மட்டும் போதும்... ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் திட்டம் இது தான் !! 1

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடக்க இருப்பதால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது. மூன்று இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரராக இருக்கலாம் அல்லது இரண்டு இந்திய வீரர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்திற்கு விடப்பட வேண்டும்.

மேலும் புதிதாக இணைந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு வெளியே 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அதில் 2 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.

எங்களுக்கு இவர்கள் மட்டும் போதும்... ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் திட்டம் இது தான் !! 2

எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களை அணிகள் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் தக்க வைக்கப்படும் வீரராக சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இருக்க விரும்புவதாக தெரிகிறது. ஆனால் முதல் தக்க வைக்கப்படும் வீரருக்கான தொகை 15 கோடி ஆக இருப்பதால் இந்த அணியின் தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சனை இந்த அணி தக்க வைக்க விரும்பும் என எதிர்பார்க்கலாம்.

எங்களுக்கு இவர்கள் மட்டும் போதும்... ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் திட்டம் இது தான் !! 3

புதிய அணியான லக்னோ தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் கேப்டனான கே எல் ராகுலை அணுகுவதாக தெரிகிறது.மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப்படுவதை விட ஏலத்தில் இருக்க விரும்புவார். அதே நேரத்தில் இரண்டு புதிய அணிகள் சூடாக பின்தொடரும் வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். மும்பை இந்தியன்ஸ் எடுக்கப்படாவிட்டால் பாண்டியா சகோதரரை அகமதாபாத் அணி‌ அணுகும்.

ஐபிஎல் 2021 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட்டை தக்கவைத்துள்ளது. மற்றும் நான்காவது வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் மொயின் அலி அல்லது சாம் கரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எங்களுக்கு இவர்கள் மட்டும் போதும்... ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் திட்டம் இது தான் !! 4

இளம் அணியான டெல்லி கேப்பிடல் தற்போதைய கேப்டனான ரிஷப் பந்தை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லி கேப்பிடல் ஆல்ரவுண்டர் அக்க்ஷர் படேல் தொடக்க வீரர் பிரித்விஷா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் அன்ரிச் நார்ட் ஜே தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் மற்றும் மூத்த வீரர்களான சுனில் நரைன் மற்றும் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை தக்கவைத்துக்கொள்ள தீர்மானிக்கும்.

எங்களுக்கு இவர்கள் மட்டும் போதும்... ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் திட்டம் இது தான் !! 5

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தக்கவைத்துள்ளது. மேலும் இந்த அணி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷானை அணுகுவதாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *