இந்திய அணியில் உனக்கு இடம் உறுதிடா தம்பி... பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா !! 1

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திலக் வர்மாவிற்கு, விரைவில் இந்திய அணியிலும் இடம் கிடைக்கும் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்திய அணியில் உனக்கு இடம் உறுதிடா தம்பி... பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா !! 2

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனியை (36*) தவிர மற்ற வீரர்கள் அனைவரும், மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 97 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் உனக்கு இடம் உறுதிடா தம்பி... பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா !! 3

இதன்பின் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும், 33 ரன்கள் எடுத்த போது 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், திலக் வர்மா (36) மற்றும் சோகீன் (18) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், நடப்பு தொடரில் தனது 8வது தோல்வியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து இரண்டாவது அணியாக வெளியேறியது.

இந்திய அணியில் உனக்கு இடம் உறுதிடா தம்பி... பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா !! 4

இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, மும்பை அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இளம் வீரர் திலக் வர்மாவை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.

இந்திய அணியில் உனக்கு இடம் உறுதிடா தம்பி... பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா !! 5

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “திலக் வர்மா திறமையான வீரர். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் முதல் வருடம் தான் என்றாலும், அவரது ஆட்டத்தில் ஒரு தனித்துவமும், பொறுமையும் தெரிகிறது. திலக் வர்மா நிச்சயம் இந்திய அணியிலும் மிக விரைவில் இடம்பிடிப்பார் என நம்புகிறேன். தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுவதற்காக திலக் வர்மா மிகுந்த வெறியுடன் காத்திருக்கும் ஒரு நபர்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *