நம்ம டீம் இருக்கிற நிலைமைல ஜோக் அடிச்சு விளையாடலாமா சார்..? அம்பத்தி ராயூடுவை விளாசும் ரசிகர்கள் !! 1

சென்னை அணியின் சீனியர் வீரரான அம்பத்தி ராயூடுவின் ஒரே ஒரு ட்வீட் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு இவரை விட சிறந்த வீரரே கிடையாது என புகழப்படும் அளவிற்கு, பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அம்பத்தி ராயூடு, இதுவரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் 4187 ரன்கள் எடுத்துள்ளார்.

நம்ம டீம் இருக்கிற நிலைமைல ஜோக் அடிச்சு விளையாடலாமா சார்..? அம்பத்தி ராயூடுவை விளாசும் ரசிகர்கள் !! 2

கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயூடுவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ம் ஆண்டு தொடருக்கான ஏலத்தின் போது தனது அணியில் எடுத்தது. 2018ம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் சென்னை அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த அம்பத்தி ராயூடுவை, சென்னை அணி இந்த வருட தொடருக்கான தனது அணியில் தக்க வைக்கவில்லை, இருந்த போதிலும் மெகா ஏலத்தின் போது 6 கோடி ரூபாய்க்கு அவரை மீண்டும் அணியில் எடுத்தது.

நம்ம டீம் இருக்கிற நிலைமைல ஜோக் அடிச்சு விளையாடலாமா சார்..? அம்பத்தி ராயூடுவை விளாசும் ரசிகர்கள் !! 3

நடப்பு தொடரில் சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு அம்பத்தி ராயூடு, பெரும்பாலான போட்டிகளில் தனது பங்களிப்பை சரியாக செய்யாததும் காரணமாக பார்க்கப்படும் நிலையில், திடீரென அம்பத்தி ராயூடு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இது தான் எனது கடைசி ஐபிஎல் தொடர், இதனை மகிழ்ச்சியாக அறிவித்து கொள்கிறேன். ஐபிஎல் தொடரில் இரண்டு பெரிய அணிகளுக்காக கடந்த 13 ஆண்டுகளாக விளையாடியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.

நம்ம டீம் இருக்கிற நிலைமைல ஜோக் அடிச்சு விளையாடலாமா சார்..? அம்பத்தி ராயூடுவை விளாசும் ரசிகர்கள் !! 4

அம்பத்தி ராயூடுவின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஒட்டுமொத்த ரசிகர்களும் அம்பத்தி ராயூடுவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர், ஒரு சிலர் அம்பத்தி ராயூடுவின் திடீர் ஓய்வு முடிவை நினைத்து வருத்தமும் தெரிவித்தனர், ஆனால் அம்பத்தி ராயூடுவோ திடீரென தனது ட்வீட்டை டெலிட் செய்துள்ளார். அம்பத்தி ராயூடுவின் இந்த செயல் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் பலர் அம்பத்தி ராயூடுவை சமூக வலைதளங்கள் மூலம் வச்சு செய்து வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published.