அந்த பையன பாத்தாலே பேட்ஸ்மென்கள் எல்லாம் பயப்படுறாங்க ;இளம் வீரரை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா !! 1

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை பார்த்து எதிரணி பேட்ஸ்மென்கள் பயப்படுகிறார்கள் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புகழின் உச்சிக்கே சென்ற இந்திய அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தன்னுடைய அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சின்னாபின்னமாக சிதறடித்தார்.அந்த பையன பாத்தாலே பேட்ஸ்மென்கள் எல்லாம் பயப்படுறாங்க ;இளம் வீரரை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா !! 2

மிக எளிதாக 150+kmph வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் அதிவேக பந்து வீசி 14 வேகமான பந்திர்கான அவார்டை பெற்றுள்ளார்.மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 157 kmph வேகத்தில் பந்து வீசி அதிவேகமான பந்து என்ற இடத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இடத்தில் லக்கி பெர்குசன் 157.3kmph இடம் பிடித்துள்ளார்.

இப்படி வேகமாக பந்து வீசும் இளம் வீரர் உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள் பலர் ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டியும் அறிவுரை வழங்கியும் வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் உம்ரான் மாலிக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.அந்த பையன பாத்தாலே பேட்ஸ்மென்கள் எல்லாம் பயப்படுறாங்க ;இளம் வீரரை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா !! 3

அதில் பேசிய அவர்,முதன் முதலில் நான் கூறவெண்டியது உம்ரான் மாலிக்கை தான், அவரை பற்றி பேசி தான் ஆகவேண்டும்,அவர் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் , உம்ரான் மிக சிறந்த வேகத்தில் பந்து வீசுகிறார்.இவருடைய பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மென்களை கதிகலங்க வைக்கிறது,இவர் எதிரணி பேட்டர்களை ஓட வைக்கிறார் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர், இவருடைய பந்தை ஓரிரு போட்டிகளில் அடித்து விட்டனர் ஆனால் அந்த அணி மரண அடியாக இருந்தது,அவருடைய 4 ஓவர்களில் கிட்டத்தட்ட 40 ரன்கள் அடித்திருந்தார்கள், ஒரு போட்டியில் கேன் வில்லியம்சன் இவரை முழு ஓவரையும் பந்து வீச விடவில்லை, ஆனால் இவர் எந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினாரோ, அந்த போட்டிகளில் எல்லாம் 3 அல்லது 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களும் அடங்கும் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.