ஓவர் சீன் வேண்டாம்... அடுத்த தொடரில் சென்னை அணி வெற்று பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது; பகிரங்கமாக பேசிய ஸ்ரீசாந்த் !! 1
ஓவர் சீன் வேண்டாம்… அடுத்த தொடரில் சென்னை அணி வெற்று பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது; பகிரங்கமாக பேசிய ஸ்ரீசாந்த்

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதை முடித்துவிட்டு இந்திய வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிக்கு திரும்புகின்றனர்.

ஓவர் சீன் வேண்டாம்... அடுத்த தொடரில் சென்னை அணி வெற்று பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது; பகிரங்கமாக பேசிய ஸ்ரீசாந்த் !! 2

சில வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கின்றனர். அவர்கள் இப்போதே தங்களது ஐபிஎல் அணிகளுக்கு திரும்பி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிடத்தக்க விதமாக, மகேந்திர சிங் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து தனது பயிற்சியை துவங்கிவிட்டார். அவருடன் சேர்ந்து இன்னும் சில சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் பயிற்சி செய்தனர்.

 

கடந்த ஐபிஎல் சீசனில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனைத்து போட்டியிடும் நான்கு மைதானத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு, சொந்த மைதானத்தில் ஒரு போட்டி வெளி மைதானத்தில் ஒரு போட்டி என்கிற கோணத்தில் நடைபெற்றது போல நடைபெற உள்ளது.

ஓவர் சீன் வேண்டாம்... அடுத்த தொடரில் சென்னை அணி வெற்று பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது; பகிரங்கமாக பேசிய ஸ்ரீசாந்த் !! 3

இதனால் எதிர்வரும் ஐபிஎல் குறித்த விஷயங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக அதிகம் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும் ஐபிஎல் தொடர் குறித்தும் தன்னுடைய பார்வையை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஓவர் சீன் வேண்டாம்... அடுத்த தொடரில் சென்னை அணி வெற்று பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது; பகிரங்கமாக பேசிய ஸ்ரீசாந்த் !! 4

இதுகுறித்து ஸ்ரீசாந்த் தெரிவிக்கையில்,“என்னை பொருத்தவரையில் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறும் என நம்புகிறேன் அந்த அணிக்கு என்னுடைய முழுமையான ஆதரவும் உள்ளது. இதனை தவிர்த்து மற்ற புதிய அணிகளும் வெற்றி பெற்றால் அது வேடிக்கையாக தான் இருக்கும், குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் இந்திய கிரிக்கெட்டிர்க்காக விராட் கோலி அதிகம் செய்திருக்கிறார். அவருக்காகவாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும்” என்று ஸ்ரீசாந் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *