நான் ஃபீல்டிங்கில ஜித்தா இருக்க இதுதான் காரணம்; ரகசியத்தை போட்டுடைத்த ரவீந்திர ஜடேஜா..
என்னோட பீல்டிங்கின் ரகசியம் இதுமட்டும் தான் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என அறியப்படும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.,நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக சிறந்த முறையில் பங்காற்றி சென்னை அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மூன்றாவது போட்டியில் இவருடைய ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது பேட்டிங் பந்துவீச்சு ஃபீலிங் என அனைத்திலும் மாஸ் காட்டிய ஜடேஜா சென்னை அணி எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் வெற்றி பெறுவதற்கு உதவியாக திகழ்ந்தார்.
From a glittering first game in #CSK colours 💛 to the secret ingredient behind Jadeja's stunning catches 😎
Match-winners @imjadeja & @ajinkyarahane88 sum up a delightful Wankhede win 👌👌 – By @Moulinparikh
Full Interview 🎥🔽 #TATAIPL | #MIvCSK https://t.co/GPltQkGaza pic.twitter.com/9nl9cmvPGz
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
இந்தநிலையில் போட்டி முடிவடைந்த பின் ரஹானேவுடன் சேர்ந்து பேட்டி ஒன்று கொடுத்த ரவீந்திர ஜடேஜா.,தன்னால் எப்படி சிறப்பாக பீல்டிங் செய்ய முடிகிறது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து ஜடேஜா பேசுகையில்., “எப்பொழுெதெல்லாம் நான் பீல்டிங்கிர்க்காக நிக்கிறெனோ அப்பொலுதெல்லாம் பந்துவீச்சாளர்களை பொருத்தும் அவர்கள் வீசும் லைன் மற்றும் லென்தை பொருத்தும் பந்து இங்கு வருகிறது என கணித்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவேன்.மற்ற பீல்டர்களை விட நான் 1 அல்லது 2 நொடி முன்கூட்டியே செயல்படுவதாக நினைக்கிறேன்.

அதேபோன்று பந்து வீச்சில் பந்து திரும்புகிறது என்றால் நானும் அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சர்ட்னரும் எந்த ஏறியாவில் பந்து வீசவேண்டும் என திட்டமிடுவோம், எனென்றால் அவர்களிடம் பவர் ஹிட்டர்கள் உள்ளனர்.ஒவ்வொரு நேரமும் மைதானமும் ஒவ்வொரு தன்மை உடையது.சில நேரம் விக்கெட் பிளாட்டாக இருக்கும் சில நேரம் ஸ்டிக்கியாக இருக்கும்.இதனால் நானும் சார்ட்னரும் அதிகம் கலந்துரையாடுவோம் மேலும் ஒருவருக்கு ஒருவர் அறிவுரைகளை பகிர்ந்து கொள்வோம் என ஜடேஜா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.