ஒரு சென்னை வீரருக்கு கூட இடம் இல்லை... 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !! 1
ஒரு சென்னை வீரருக்கு கூட இடம் இல்லை… 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை துவங்கியது.

ஒரு சென்னை வீரருக்கு கூட இடம் இல்லை... 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !! 2

பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5வது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

ஒரு சென்னை வீரருக்கு கூட இடம் இல்லை... 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மிரட்டல் கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சென்னை அணியின் வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் சில முன்னாள் வீரர்கள், நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான தங்களது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்தும் அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான அவரது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஒரு சென்னை வீரருக்கு கூட இடம் இல்லை... 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !! 4

தனது அணியின் கேப்டனாக டூபிளசியை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தனது அணியின் பேட்ஸ்மேன்களாக சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கேமிரான் க்ரீன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பினிசராக ரிங்கு சிங்கையும், ஆல் ரவுண்டர்களாக ரசீத் கான் மற்றும் வருண் சக்கரவர்தியையும் தேர்வு செய்துள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ஆடும் லெவன்;

டூபிளசிஸ், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கேமிரான் க்ரீன், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், ரசீத் கான், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆகாஷ் மத்வால்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *