ஐ.பி.எல் 2019; ஆரோன் பின்ச், கிளன் மேக்ஸ்வெல் ஏலத்தில் இருந்து விலகல் !! 1

ஐ.பி.எல் 2019; ஆரோன் பின்ச், கிளன் மேக்ஸ்வெல் ஏலத்தில் இருந்து விலகல்

ஐ.பி.எல் 2019ம் ஆண்டு தொடருக்கான ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகியுள்ளனர்.

உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் என்று 2019-ம் ஆண்டின் தொடக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியான ஷெட்யூல் இருப்பதால் ஐபிஎல் வேண்டாம் என்று கிளென் மேக்ஸ்வெலும், ஏரோன் பிஞ்சும் முடிவெடுத்துள்ளார்கள்.

ஐ.பி.எல் 2019; ஆரோன் பின்ச், கிளன் மேக்ஸ்வெல் ஏலத்தில் இருந்து விலகல் !! 2

இம்மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திருவிழாவிலிருந்து இரு ஆஸ்திரேலிய வீரர்களும் விலகியுள்ளனர். இந்திய அணியை டெஸ்ட் தொடரில் படுத்தி எடுத்த இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் சாம் கரன் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு தன்னை ஏலத்துக்கு அறிவித்துள்ளார். அதே போல் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஆலோசகராக இருந்த லஷித் மலிங்காவும் இம்முறை ஏலத்தில் களத்தில் குதிக்கிறார்.

மேக்ஸ்வெலை டெல்லி டேர் டெவில்ஸ் (இப்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணி விடுவித்தது, ஏரோன் பிஞ்ச்சை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்தது. இருவருமே பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்.

ஐ.பி.எல் 2019; ஆரோன் பின்ச், கிளன் மேக்ஸ்வெல் ஏலத்தில் இருந்து விலகல் !! 3

இம்முறை ஏலத்தில் உள்ள பெரிய வீரர்களில் டேல் ஸ்டெய்ன், மெக்கல்லம், டி ஆர்க்கி ஷார்ட், கோரி ஆண்டர்சன், ஜெய்தேவ் உனாட்கட், யுவராஜ் சிங், ஷமி, அக்சர் படேல், சர்பராஸ் கான், சஹா, இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.

ஜெய்ப்பூரில் ஏலம்;

2019-ம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு வரவேற்பு இருப்பதால் தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கும் என்றும் அதனால் விடுமுறை நாட்க ளில் ஏலத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது மாற்றி வைக்கப்பட்டு ஏலம் நடக்கிறது.

ஐ.பி.எல் 2019; ஆரோன் பின்ச், கிளன் மேக்ஸ்வெல் ஏலத்தில் இருந்து விலகல் !! 4

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதனால் அந்த புதிய வீரர்களை அதிகமாக இந்த ஏலத்தில் எடுக்கலாம். டெல்லி அணி, கவுதம் காம்பீர் உட்பட சில வீரர்களை விடுவித்துவிட்டது. சன் ரைசர் ஐதராபாத் அணியில் இருந்த ஷிகர் தவான், டெல்லி அணிக்கு மாறியுள்ளார். அந்த அணி விருத்திமான் சாஹா, பிராத்வொயிட் ஆகியோரை விடுவித்துள்ளது. இதே போல மற்ற அணிகளும் சில வீரர்களை விடுவித்தும் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஐபிஎல் நடக்க இருக்கும் நேரத்தில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டி இந்தியாவில் நடக்குமா, வெளிநாட்டில் நடக்குமா என்ப து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *