நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 1

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டாக நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆரவராத்துடன் நடத்தப்படும் இந்த தொடர், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மட்டும் சத்தமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டது.

14வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது நிலையில் சென்னையில் நடந்த ஏலத்தில் மிகச் சிறந்த யுக்திகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டது.

நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 2
இந்த வருடத்திற்கான ஏலத்தில் 1098 வீரர்கள் தங்களது பெயரை 2021 காண ஐபிஎல் போட்டிக்கு பதிவு செய்தனர் ஆனால் அதிலிருந்து 298 வீரர்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கி இந்த ஏலத்தில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் 5 வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலத்தில் போயிருக்கிறார்கள்.

ஷாருக்கான்

நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 3

சமீபமாக நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி போட்டியில் மிகச் சிறப்பாக செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் தனது ஆரம்ப தொகையாக 20 லட்சத்தை நினைத்திருந்தார், இவரை அனைத்து அணிகளும் தங்கள் அணியில் சேர்ப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தொகையை அதிகரித்தது இந்நிலையில் மிக சாமர்த்தியமாக பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 5.25 கோடிக்கு தனது அணியில் ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

சட்டீஸ்வர் புஜாரா

நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 4

டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி கூடிய சட்டீஸ்வர் புஜாரா 2021 கான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாரா சென்னை அணிக்காக 50 லட்சம் ரூபாய் ஏலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் புஜாராவை ஏன் சென்னை அணி தேர்ந்தெடுத்தது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் ஐபிஎல் போட்டியின் தலைசிறந்த அணியான சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஹர்பஜன் சிங்.

நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 5

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த சூழல் ஜாம்பவானான ஹர்பஜன் சிங்க் கடந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டியோடு சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார், இந்நிலையில் 2021 கான ஐபிஎல் போட்டியில் தனது ஆரம்ப விலையாக 2 கோடியை நிர்ணயித்த ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

160 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது அணிக்கு தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.இருந்தபோதும் ஹர்பஜன் சிங்கின் அனுபவம் அந்த அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

கேதர் ஜாதவ்

நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 6

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக செயல்பட்ட கேதர் ஜாதவ் 8 போட்டிகளில் பங்கேற்று 62 ரன்கள் மட்டுமே எடுத்தார், இவரின் இந்த மோசமான செயல்பாட்டால் சென்னை அணியில் இருந்து நீக்கப்பட்டார்,இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் இவர் எந்த அணிக்கும் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூபாய் 2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆடம் மில்னே

நீங்க எல்லாம் லிஸ்ட்லையே இல்லையேடா; அனைவருக்கும் ஷாக் கொடுத்த ஐந்து வீரர்கள் !! 7

இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்களை மட்டுமே வீழ்த்திய ஆடம் மில்னே, 2021 கான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3.2கோடிக்கு தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி 18 இல் நடைபெற்ற 2021 கான ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே அடம் மில்னேவை கைப்பற்றும் மிகப்பெரும் போர் ஒன்றே நடந்தது என்று கூறலாம், அந்த அளவிற்கு நியூசிலாந்து அணியின் வீரருக்காக இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டது.கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக சாமர்த்தியமாக ஆடமை தட்டி தூக்கியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *