விலையை குறைத்து கொண்டு ஏலத்திற்கு தயாரான யுவராஜ் சிங்

ஐ.பி.எல் 2019ம் ஆண்டு தொடருக்கான தனது அடிப்படை விலையை யுவராஜ் சிங் ஒரு கோடி ரூபாயாக குறைத்துள்ளார்.

பெரும்பாலான வீரர்கள் அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் 70 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்படுகின்றனர். இதில் 20 பேர் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் 50 பேர் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

இதற்காக மொத்தம் 232 வெளிநாட்டினர் உள்பட 1003 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.

ஐ.பி.எல். வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட யுவராஜ்சிங்கின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். விர்த்திமான் சகா, அக்‌ஷர் படேல், முகமது ‌ஷமி, இஷாந்த்சர்மா ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ.1 கோடியாகும்.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட்டுக்கு ரூ.1½ கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த முறை ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை போனவர் ஆவார். தற்போது ராஜஸ்தான் அணி அவரை விடுவித்து இருந்தது. அவரை கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.11½ கோடிக்கு எடுத்து இருந்தது.

எந்த ஒரு இந்திய வீரரும் ரூ.2 கோடி அடிப்படை விலைப்பட்டியலில் இடம் பெறவில்லை. ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்ச்ன, மேக்குல்லம் உள்பட 9 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

ஜெய்ப்பூரில் ஏலம்;

2019-ம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு வரவேற்பு இருப்பதால் தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கும் என்றும் அதனால் விடுமுறை நாட்க ளில் ஏலத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது மாற்றி வைக்கப்பட்டு ஏலம் நடக்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதனால் அந்த புதிய வீரர்களை அதிகமாக இந்த ஏலத்தில் எடுக்கலாம். டெல்லி அணி, கவுதம் காம்பீர் உட்பட சில வீரர்களை விடுவித்துவிட்டது. சன் ரைசர் ஐதராபாத் அணியில் இருந்த ஷிகர் தவான், டெல்லி அணிக்கு மாறியுள்ளார். அந்த அணி விருத்திமான் சாஹா, பிராத்வொயிட் ஆகியோரை விடுவித்துள்ளது. இதே போல மற்ற அணிகளும் சில வீரர்களை விடுவித்தும் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஐபிஎல் நடக்க இருக்கும் நேரத்தில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டி இந்தியாவில் நடக்குமா, வெளிநாட்டில் நடக்குமா என்ப து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. • SHARE

  விவரம் காண

  புவனேஷ்வர் பும்ராவை மட்டுமே நாம் நம்பி இருக்கிறோம்: விவிஎஸ் லட்சுமனன்

  புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களை நாம் மிக அதிகம் நம்பியுள்ளோம். அவர்களை நோக்கியே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும்...

  ஆசியாவின் ஹாட்டஸ்ட் மென்: டாப்-10ல் விராட் கோலி

  ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த...

  மீண்டும் சொதப்பிய ராகுல், விஜய்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிப்பு !!

  ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த கே.எல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சமூக வலைதளங்களில்...

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் !!

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில்...

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் !!

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்...