டூபிளசிஸ் கேப்டன்... இரண்டு சென்னை வீரர்களுக்கு இடம்; தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் !! 1
டூபிளசிஸ் கேப்டன்… இரண்டு சென்னை வீரர்களுக்கு இடம்; தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்

முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான், நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை துவங்கியது.

டூபிளசிஸ் கேப்டன்... இரண்டு சென்னை வீரர்களுக்கு இடம்; தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் !! 2

பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5வது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

டூபிளசிஸ் கேப்டன்... இரண்டு சென்னை வீரர்களுக்கு இடம்; தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் !! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மிரட்டல் கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சென்னை அணியின் வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசும் முன்னாள் வீரர்கள், தங்களது சிறந்த ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதானும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான அவரது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

டூபிளசிஸ் கேப்டன்... இரண்டு சென்னை வீரர்களுக்கு இடம்; தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் !! 4

இர்பான் பதான் தனது அணியின் கேப்டனாக டூபிளசிஸை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். துவக்க வீரர்களாக டூபிளசியுடன், சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள இர்பான் பதான், மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வுச் செய்துள்ளார்.

விக்கெட் கீப்பராக ஹென்ரிச் கிளாசனையும், பினிசராக ரிங்கு சிங்கையும் தேர்வு செய்துள்ள இர்பான் பதான், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரசீத் கான், ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது சிராஜ், முகமது ஷமி, மோஹித் சர்மா மற்றும் மதீஷா பதிரானா ஆகியோரையும் தேர்வு  செய்துள்ளார்.

டூபிளசிஸ் கேப்டன்... இரண்டு சென்னை வீரர்களுக்கு இடம்; தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் !! 5

இர்பான் பதான் தேர்வு செய்த ஆடும் லெவன்;

டூபிளசிஸ் (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரசீத் கான், முகமது சிராஜ், முகமது ஷமி, மோஹித் சர்மா, மதீஷா பதிரானா (Impact Player)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *