ஐபிஎல் போட்டிகள் இனி திட்டமிட்டபடி நடக்காது ! பிசிசிஐ அறிவித்த புதிய திட்டம் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் இனி திட்டமிட்டபடி நடக்காது ! பிசிசிஐ அறிவித்த புதிய திட்டம் ! 2

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள் இனி திட்டமிட்டபடி நடக்காது ! பிசிசிஐ அறிவித்த புதிய திட்டம் ! 3

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதபிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்திருக்கிறது.

இதன்காரணமாக தற்போது பிசிசிஐ புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் இனி நடைபெறாது. மீதமுள்ள அனைத்து போட்டிகளும் மும்பையில் மைதானத்தில் தான் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் போட்டிகள் இனி திட்டமிட்டபடி நடக்காது ! பிசிசிஐ அறிவித்த புதிய திட்டம் ! 4

மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய் பாட்டீல் மைதானம் மற்றும் பிராபோர்ன் மைதானம் ஆகிய மூன்று மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தற்போது பிசிசிஐ மும்பையில் உள்ள ஹோட்டலில் வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *