விட்டே கொடுக்காத ஸ்டார் நிறுவனம்... அடுத்த ஐந்து வருடத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் !! 1

2023-2025 வரை நடைபெறும் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் மற்றும் வியோகாம் 18 ஆகிய நிறுவனம் டெண்டரில் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர், உலகின் அதிக பணம் புழங்கும் போட்டிகளில் ஒன்றாக வலம் வருகிறது.விட்டே கொடுக்காத ஸ்டார் நிறுவனம்... அடுத்த ஐந்து வருடத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் !! 2

ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றதால் ஐபிஎல் தொடருக்கான வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது, பிரண்டிங், விளம்பரம் என அனைத்தையும் போட்டியின் நடுவில் மக்கள் மனதில் கொண்டு சேர்ப்பதற்கு முக்கியமான ஒரு வழியாக ஐபிஎல் தொடர் இருப்பதால், எப்படியாவது இந்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை பெற வேண்டுமென்று உலகில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.

 

இந்த நிலையில் பிசிசிஐ தலைமைச் செயலாளர் ஜெய்ஷா எதிர்வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் 94 உயர்த்துவதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

இந்த அறிவிப்பு வந்த உடனேயே ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை பெறுவதற்கான போட்டியும் கடுமையாக நடைபெற்றது.

விட்டே கொடுக்காத ஸ்டார் நிறுவனம்... அடுத்த ஐந்து வருடத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் !! 3

ஜூன் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் 2023-2027 வரை டிவியில் ஒளிபரப்பு உரிமத்தை ஒரு போட்டிக்கு 57.5கோடி என 23,575 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது, அதேபோன்று Digital rights வலைதளங்களில் ஒளிபரப்பும் உரிமத்தையும் மற்றும் selected 18 games உரிமத்தையும் வியோகாம்18 23.758 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

இதனால் அடுத்த 5 வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு ஒப்பந்தம் 48,390 கோடிக்கு மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் உலகின் அதிக பணம் புழங்கும் ஐபிஎல் தொடர் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் மூலம் கிரிக்கெட் தொடர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளதாக ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.