ஐபிஎல் தொடருக்காக செல்லும் வீரர்களுக்கு கெடுபிடி; வேற லெவல் ரூல்ஸ் போடும் யுஏஈ! முழு விவரம் இதோ.. 1

ஐபிஎல் தொடருக்காக செல்லும் வீரர்களுக்கு கெடுபிடி; வேற லெவல் ரூல்ஸ் போடும் யுஏஈ! முழு விவரம் இதோ..

ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் கிரிக்கெட் வீரர்களுக்கு அடுக்கடுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13 வது சீசன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிச் சென்றது. இறுதிவரை நடத்த முடியாமல் போய்விடும் என எதிர்பார்க்கப்பட்ட போது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த உலக கோப்பை டி20 தொடர் ரத்து ஆனதால், இதனை பயன்படுத்திக் கொண்ட ஐபிஎல் நிர்வாகம் அந்த இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டது.

ஐபிஎல் தொடருக்காக செல்லும் வீரர்களுக்கு கெடுபிடி; வேற லெவல் ரூல்ஸ் போடும் யுஏஈ! முழு விவரம் இதோ.. 2

இந்தியாவில் நடத்த அனுமதி இல்லாதபோதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான எழுத்துவடிவ அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.

ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் எத்தனை நாட்கள் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து விட்டபோதும், முழுமையான அட்டவணையை இன்னும் வெளியிடவில்லை. நவம்பர் 14ஆம் தேதி இந்த ஆண்டு தீபாவளி வருவதால் அதற்கு முன்னதாக இறுதிப் போட்டியை வைத்து முடிக்கும்படி ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தொலைக்காட்சி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஐபிஎல் தொடருக்காக செல்லும் வீரர்களுக்கு கெடுபிடி; வேற லெவல் ரூல்ஸ் போடும் யுஏஈ! முழு விவரம் இதோ.. 3

மேலும் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த விவோ நிறுவனம் அதிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளதால் அது குறித்து பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் முடிவு செய்யப்பட்ட பிறகு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் வருகிற 20-ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செள்ளவிருக்கின்றனர். அவர்கள் எங்கு தங்க வேண்டும் எப்படி அவர்களுக்கு பரிசோதனை நடைபெறும் என பல அடுக்கடுக்கான விதிமுறைகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

ஐபிஎல் தொடருக்காக செல்லும் வீரர்களுக்கு கெடுபிடி; வேற லெவல் ரூல்ஸ் போடும் யுஏஈ! முழு விவரம் இதோ.. 4

அதில் ஒன்றாக, சுமார் 20 மையங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பரிசோதனை நடத்தப்படும். ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி ஹோட்டல் அறை. கிரிக்கெட் பயிற்சிக்கு முன்பாக எந்த ஒரு வீரரும் மற்றொரு வீரரை சந்திப்பதற்கு அனுமதி கிடையாது. ஒரு அணி வீரர்கள் மற்றொரு அணி வீரர்களுடன் கலந்து பேசுவதோ பயிற்சியில் ஈடுபடுவதோ கூடாது. விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு ரசிகர்களுடன் பேசுவதோ புகைப்படம் எடுத்துக் கொள்வதோ கூடாது என பல அடுக்கடுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

முழுமையான விதிமுறைகளின் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *