ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்? 1

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் திங்களன்று இந்த போட்டி நடைபெற இருக்கிறது. அஜிங்கியா ரஹானே மற்றும் ரவி அஷ்வின் இருவரும் அணியை வழிநடத்துகின்றனர்.

ராஜஸ்தான் அணிக்கு சொந்த மைதானம் கூடுதல் பலமாக அமையும். ஒரு வருட கால இடைவெளிக்குப் பின்னர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இணைந்துள்ளது சாதகமான ஒன்று. போட்டியை வெற்றியுடன் துவங்க முற்படுகின்றனர்.

பஞ்சாப் கடந்த ஆண்டு லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் இறுதியில் துரதிஷ்டமாக வெளியேறினர். இம்முறை நடுத்தர வீரர்களுக்கு மிகவும் மெனக்கெட்டுள்ளனர். ராஜஸ்தான் மைதானத்தில் வெற்றிபெற பஞ்சாப் சற்று போராட வேண்டும்.

பிட்ச் நிலவரம்

பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நல்ல நிலையில் உள்ளது. ஆனால் ஜெய்ப்பூரில் வேக பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் 40 போட்டிகளில் 26 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வென்றது. அதனால், டாஸ் வென்ற அணிபந்து வீச்சை தேர்வு செய்யும்.

அணி வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்? 2

சாத்தியமான லெவன்:  ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்ப கவுதம்,ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி, வருண் ஆரோன்.

கிங்ஸ் XI பஞ்சாப்

ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்? 3
New Delhi: Kings XI Punjab’s Ankit Rajpoot celebrates fall of Prithvi Shaw’s wicket during an IPL 2018 match between Kings XI Punjab and Delhi Daredevils at Feroz Shah Kotla, in New Delhi on April 23, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

சாத்தியமான லெவன்:  கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி அஷ்வின் (கேப்டன்), முஜீப் உர் ரகுமான், அன்கிட் ராஜ்புட், ஆண்ட்ரூ டை.

சாத்தியமான சிறந்த வீரர்கள்

ஜோஸ் பட்லர் –  ராஜஸ்தான் ராயல்ஸ் | மயக் அகர்வால் –  கிங்ஸ் XI பஞ்சாப்

ஒளிபரப்பு விவரங்கள்

டிவி –  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி ஹிந்தி

லைவ் ஸ்ட்ரீமிங் –  ஹாட் ஸ்டார்

போட்டி நேரம் : 20:00 IST

ராஜஸ்தான் அணி வெல்லும் என கணிக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *