இந்த தடவே மிஸ்ஸே ஆகாது... வாய்ப்பு உறுதி; அயர்லாந்து தொடரின் மூலம் அறிமுகமாகும் மூன்று வீரர்கள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவிருக்கும் மூன்று வீரர்கள் குறித்தும் காண்போம்.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்திற்கு செல்வதால் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற பல இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிபாட்டிக்கும் முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச போட்டியில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடவிருக்கும் மூன்று இந்திய வீரர்கள் பற்றி காண்போம்.

ராகுல் திரிபாட்டி 

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் நீண்ட காலமாக கிடைக்காமல் தவித்து வந்த ராகுல் திரிபாட்டி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன்மூலம் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

மரண பார்மில் இருக்கும் இவர் நிச்சயம் எதிர்வரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடவே மிஸ்ஸே ஆகாது... வாய்ப்பு உறுதி; அயர்லாந்து தொடரின் மூலம் அறிமுகமாகும் மூன்று வீரர்கள் !! 2

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.