அயர்லாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இருந்து காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்திற்கு செல்வதால் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற பல இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிபாட்டிக்கும் முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் த்ரிபாட்டி, உம்ரன் மாலிக் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்திருந்தாலும், காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான்;
இந்த வருட ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் மிக சிறப்பான ஆட்டத்தை ஷிகர் தவான் வெளிப்படுத்தி வந்தாலும், ஷிகர் தவான் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிப்பட்டே வருகிறார். ஐபிஎல் தொடரில் 460 ரன்கள் குவித்திருந்த ஷிகர் தவானுக்கு, சீனியர் வீரர்கள் பலர் இல்லாத அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியிலாவது இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.