ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான் !! 1
ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இர்பான் பதான், உள்ளூர் போட்டிகளில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான், கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான் !! 2

இது தவிர உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மற்றும் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட தொடர்களிலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் இர்பான் பதானிற்கு சற்று ஆறுதலாக, உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் பரோடா அணியின் கேப்டனாக இர்பான் நியமிக்கப்பட்டார், ஆனால் இர்பான் பதானின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, இரண்டே போட்டியில் பதானிடம் இருந்து கேப்டன் பதவியை பரோடா நிர்வாகம் பறித்து கொண்டது.

ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான் !! 3

இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இர்பான் பதான், தான் பரோடா அணியில் இருந்து விலகி வேறு ஒரு அணிக்காக விளையாட விரும்புவதாக பரோடா கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இர்பான் பதானின் கோரிக்கையை ஏற்ற பரோடா கிரிக்கெட் வாரியம் அவரை  பரோடா கிரிக்கெட் அணியில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் இர்பான் அடுத்ததாக ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான் !! 4

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இர்பான் பதான், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நான் உடல் அளவிலும், மனதளவிலும் தயாராகவே உள்ளேன். பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகந்த மகிழ்ச்சியை தந்தது. ஆனால் வெறும் இரண்டு போட்டிகளில் என்ன தவறு நடைபெற்றது என்று தெரியவில்லை. எதற்காக என்னை கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கினார்கள் என்பதும் தெரியவில்லை. பரோடாவோ அல்லது இந்திய அணியோ எந்த அணிக்காக விளையாடினாலும் நான் எனது 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *