சிஎஸ்கேவிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான் ! தோனி இதில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் ! - இர்பான் பதான் 1

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மே 1ம் தேதி நடைபெற்ற 27வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தால் மோதியது.  இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

சிஎஸ்கேவிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான் ! தோனி இதில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் ! - இர்பான் பதான் 2

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு 72, மொயின் அலி 58 மற்றும் டூ பிளெசிஸ் 50 ரன்கள் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து இந்த மிகப்பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு 87, டீகாக் 38, ரோகித் 35 மற்றும் குர்னால் 32 ரன்கள் குவித்ததன் மூலம் 219 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

சிஎஸ்கேவிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான் ! தோனி இதில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் ! - இர்பான் பதான் 3

இந்நிலையில், இந்த போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் தான் பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில் சிஎஸ்கே அணியில் பவுலிங் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் சிஎஸ்கேவின் பவுலிங் படுமோசம் என்றே கூற வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார்க்கர் பவுலிங் வீசுவது போல் எந்த பவுலரும் இல்லை. இதுதான் அவர்களது வீக்னஸ். சாம் கரன் இருந்தாலும் அவருக்கு பிறகு யார்க்கர் பவுலர் என்று கூறும் அளவிற்கு யாருமில்லை. அதேசமயத்தில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் பவுலரும் இல்லை. சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இதை சரி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கேவிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான் ! தோனி இதில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் ! - இர்பான் பதான் 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *