ஓவர் பில்டப் வேணாம்... இனி கே.எல் ராகுலால் பழையபடி விளையாட முடியுமானே தெரியல; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 1

லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா போன்ற வீரர்களால் கே எல் ராகுலின் வாய்ப்பு பறிபோவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

லிமிடெட் ஒரு தொடர்கான இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக கருதப்படும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல், ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

ஓவர் பில்டப் வேணாம்... இனி கே.எல் ராகுலால் பழையபடி விளையாட முடியுமானே தெரியல; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 2

காயம், கோவிட் தொற்று என அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்து வரும் கே எல் ராகுல் ipl தொடர் முடிவடைந்ததிலிருந்து தற்போது வரை ஓய்விலேயே உள்ளார்.

இருந்த போதும் கே எல் ராகுல் இல்லாத குறையை இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ஈடுகட்டி வருகின்றன.ர் குறிப்பாக சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அபார சாதனை படைத்துள்ளார்.ஓவர் பில்டப் வேணாம்... இனி கே.எல் ராகுலால் பழையபடி விளையாட முடியுமானே தெரியல; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 3

இதன் காரணமாக லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ்,தீபக் ஹூடா போன்ற வீரர்களை இனிமேல் நீக்க முடியாத நிலையில் இருப்பதால், கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் அவரை எப்படி ஆடும் லெவனில் வைத்து விளையாடுவார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஸ்காட் பேசியதாவது, “ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதமான மனநிலை உள்ளது, ஏனென்றால் எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய இடத்தை மற்றொரு வீரருக்கு விட்டுக் கொடுக்க ஒருவரும் விரும்ப மாட்டார்கள். இந்திய அணி கலாச்சாரங்களைக் கொண்ட குழுவாக உள்ளனர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும், அதற்காக எல்லா சமயங்களிலும் தன்னுடைய இடத்தை மற்றொரு வீரருக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்கள், ஒரு வீரராக இருந்ததால் எனக்கு இது நன்றாகவே தெரியும், தற்போது கே எல் ராகுல் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய இடத்தை சூரியகுமார் யாதவ் நிவர்த்தி செய்துள்ளார்.மேலும் ரிஷப் பண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் இவர்கள் ரண்களாக மாற்றுகிறார்கள். இதனால் தேர்வாளர்கள் மனதில் தற்பொழுது நமக்கு கேஎல் ராகுல் தேவையா..? என்று கேள்வி எழுந்திருக்கும். கே எல் ராகுல் எப்பொழுது குணமாகி எப்பொழுது நல்ல பார்மில் வருவார்.. அவர் அதிகமான கிரிக்கெட் தொடரை இழந்துவிட்டார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கும், இதன் காரணமாகவே அவருடைய வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது ஸ்காட் ஸ்டைரிஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.