சொந்த அணிக்கே எமனாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா 1

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடர் நடந்து கொண்டு வருகிறது. இந்த ஐபில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஐபில்-இல் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, சொந்த அணிக்கே எமன் என்று கூறுகிறார்கள். இதுவரை ஐபில்-இல் அவர் விளையாடிய அனைத்து அணிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

அவர் தன்னுடைய முதல் ஐபில் போட்டியை 2008-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2009-ஆம் ஆண்டும் ராஜஸ்தான் அணிக்கே விளையாடிய ஜடேஜா, 2010-ஆம் ஆண்டு அவரை தடை செய்து விட்டதால், அந்த சீசன் அவர் விளையாடவில்லை.

2011-ஆம் ஆண்டு ஐபில் ஏலத்தில் அவரை கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி வாங்கியது. 2012-இல் இருந்து 2015-வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடினார். 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

ஆனால் வருத்தம் என்னவென்றால், இது வரை அவர் விளையாடிய அனைத்து அணிகளும் ஐபில்-இல் இருந்து தடை செய்யப்பட்டிருக்கிறது. அது அவருடைய ராசி என்று தான் சொல்ல வேண்டும்.

குஜராத் லயன்ஸ் அணி இந்த ஐபில் -இல் 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மட்டுமே புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அடுத்த ஐபில் தொடரில் குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் திரும்பி வரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *