யாரும் இதுவரை செய்யாத சாதனை… முதல் போட்டியிலேயே மிகப்பெரும் சாதனை படைத்த இஷான் கிஷன் !! 1

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம், இந்திய ஒருநாள் அணியில் கால் பதித்த இஷான் கிஷன் தனது முதல் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

யாரும் இதுவரை செய்யாத சாதனை… முதல் போட்டியிலேயே மிகப்பெரும் சாதனை படைத்த இஷான் கிஷன் !! 2
India’s Kuldeep Yadav (C) celebrates after the dismissal of Sri Lanka’s Minod Bhanuka (not pictured) during the first one-day international (ODI) cricket match between Sri Lanka and India at the R.Premadasa Stadium in Colombo on July 18, 2021. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

யாரும் இதுவரை செய்யாத சாதனை… முதல் போட்டியிலேயே மிகப்பெரும் சாதனை படைத்த இஷான் கிஷன் !! 3

இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் ஒருநாள் அணியில் கால் பதித்து, தனது முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரைசதமும் அடித்த இஷான் கிஷன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

யாரும் இதுவரை செய்யாத சாதனை… முதல் போட்டியிலேயே மிகப்பெரும் சாதனை படைத்த இஷான் கிஷன் !! 4

முன்னதாக இந்திய அணிக்கான தனது முதல் டி.20 போட்டியிலும் அரைசதம் அடித்திருந்த இஷான் கிஷன், தற்போது தனது முதல் ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளதன் மூலம், டி.20 மற்றும் ஒருநாள் என இரண்டு தொடர்களிலும் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

அதே போல் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பிய இஷான் கிஷன், இதன் மூலம் ஒருநாள் தொடர்களில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *