தனது 100வது டெஸ்டில் விளையாட ரெடியாக இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ! 1

நாளை(பிப்.24) பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100வது டெஸ்டில் விளையாடப் போகிறார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

தனது 100வது டெஸ்டில் விளையாட ரெடியாக இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ! 2

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் என்று கூறியுள்ளனர்.  3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி(நாளை) தொடங்க இருக்கிறது.

இந்த போட்டி பிங்க் நிற பந்தில் நடைபெற இருப்பதால் வீரர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு சிரமமாக இருக்கும்.  இருப்பினும் இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது 100வது டெஸ்டில் விளையாட ரெடியாக இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ! 3

இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு இதுதான் 100வது டெஸ்ட் போட்டியாகும். இசாந்த் சர்மா இதுவரை 99  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32.22 அவரேஜ் பெற்று 300 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதில் 11 முறை 5 விக்கெட்களையும் ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இவர் ஒரு முறை 7 விக்கெட்டுகள் வீழ்த்தி 74 ரன்கள் கொடுத்ததே சிறப்பானதாக கருதப்படுகிறது.

இவர் இதன்மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான கபில்தேவிற்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். நாளை தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்த் சர்மா எத்தனை விக்கெட்டுகள் எடுக்கப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தனது 100வது டெஸ்டில் விளையாட ரெடியாக இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *