Sarfaraz Khan, Sarfaraz Khan RCB, RCB, IPL 2017, Cricket, Sarfaraz Khan IPL 2017

அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. அதில் ஒரு வீரர் இளம் வீரர் சர்பராஸ் கான். ஜனவரி 4ஆம் தேதி அன்று ஒவ்வொரு அணியும் அவர்கள் தக்கவைத்து கொள்ளும் வீரர்களின் பெயரை வெளியிட்டது. விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள், இதனால் மூன்றாவது வீரரை தேர்வு செய்தவதற்கு குழம்பி போனார்கள்.

காயம் காரணமாக கடந்த சீசன் முழுவதும் ஒரே போட்டியில் கூட விளையாடாத சர்பராஸ் கானை 3 கோடி கொடுத்து வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. பெங்களூரு அணியிடம் இருந்து இதை பற்றி போன் கால் வரவே சர்பராஸ் கான் சந்தோசத்தில் மூழ்கினார்.

விராட் கோலி போல் ஒருவருடன் விளையாடுவது கனவு போல் இருக்கிறது - சர்பராஸ் கான் 1
Royal Challengers Bangalore’s middle order and young promising batsman Sarfaraz Khan has been ruled out from the tournament due to leg injury. During the Practice game on Monday in M. Chinnaswamy…

“அவினேஷ் வைத்யா (பெங்களூரு அணியின் மேனேஜர்) எனக்கு போன் செய்து உன்னை தக்கவைத்து கொள்கிறோம் என கூறினார். என்னால் அதை நம்ப முடியவில்லை, அந்த சந்தோசத்தை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் என்னிடம் ஒரு குடும்பம் போல் பழகுகிறார்கள். எனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு கூட அவர்கள் தான் பணம் கொடுத்தார்கள். என்னை மீண்டும் தக்கவைத்து கொண்டது சந்தோசமாக இருக்கிறது,” என சர்பராஸ் கான் கூறினார்.

இந்த சிறு வயதிலேயே, அந்த அணியில் அவருக்கு என்ன வேலை என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் நல்ல ஸ்கோர் அடித்த பிறகு, கடைசி நேரத்தில் அடித்து ஆட வேண்டும் என்றும் அவருக்கு தெரிந்திருக்கிறது. இதனால், பிற்காலத்தில் அவர் ஒரு நட்சத்திர வீரராக வருவார் என எதிர்பார்க்கலாம்.

“விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்களுடன் விளையாடுவது கனவு போல் இருக்கிறது. அவர்களை டிவியில் பார்த்து கொண்டிருந்தேன். அவர்களிடம் இருந்து பல அறிவுரைகள் பெற்றுருக்கிறேன். இனியும் அவர்களிடம் இருந்து பேட்டிங் டிப்ஸ் எதிர்பார்பேன்,” என சர்பராஸ் கான் கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *