பெரிய சம்பவம் நடக்க போகுதுனு நினைச்சோம்.... ஆனால் ஏமாந்துட்டோம்; பெங்களூர் பயிற்சியாளர் வேதனை !! 1

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருவதால் விராட் கோலி நிச்சயம் விரக்தியடைந்திருப்பார் என பெங்களூர் அணியின் பயிற்சியாளரான மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெரிய சம்பவம் நடக்க போகுதுனு நினைச்சோம்.... ஆனால் ஏமாந்துட்டோம்; பெங்களூர் பயிற்சியாளர் வேதனை !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 70 ரன்களும், பாரிஸ்டோ 66 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூர் அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பெரிய சம்பவம் நடக்க போகுதுனு நினைச்சோம்.... ஆனால் ஏமாந்துட்டோம்; பெங்களூர் பயிற்சியாளர் வேதனை !! 3

இதன்பின் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் (10) மற்றும் விராட் கோலி (20) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் (35) மற்றும் படித்தர் (26) ஓரளவிற்கு ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பெரிய சம்பவம் நடக்க போகுதுனு நினைச்சோம்.... ஆனால் ஏமாந்துட்டோம்; பெங்களூர் பயிற்சியாளர் வேதனை !! 4

இந்தநிலையில், இந்த போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய பெங்களூர் அணியின் பயிற்சியாளரான மைக் ஹெசன், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் நிச்சயம் விராட் கோலி விரக்தியடைந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

பெரிய சம்பவம் நடக்க போகுதுனு நினைச்சோம்.... ஆனால் ஏமாந்துட்டோம்; பெங்களூர் பயிற்சியாளர் வேதனை !! 5

இது குறித்து மைக் ஹெசன் பேசுகையில், “இந்தப் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி நல்ல நிலையில் இருந்தார். அவர் ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக இருந்தார். அதற்காக அவர் நன்றாகத் தயாராகி இருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வலைப்பயிற்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். இன்று விராட் கோலியின் நாளாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படி ஆகிவிட்டது. இதனால் மற்றவர்களைப் போல் விராட் கோலியும் விரக்தியடைந்தார். ஆர்சிபியைப் பொறுத்தவரையில் அவர்தான் சிறந்த வீரர். விராட் கோலி ஒரு அபாரமான வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் விரும்பியளவு ரன்களை எடுக்கவில்லை. இன்று அவர் மிகவும் நல்ல தொடர்பில் இருந்தார். நான் சொன்னதுபோல், திரைக்குப் பின்னால் நிறைய வேலைகளைச் செய்கிறார். எனினும் துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *