வெற்றிக்கு இது தான் காரணம்; நியூசிலாந்து கேப்டன் பெருமிதம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது.

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது

இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசியதாவது;

டி.20 போட்டிகளில் இது மிகச்சிறந்த போட்டி. இந்த போட்டியில் பெற்ற வெற்றி அற்புதமானது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி ஸ்பெஷலானது. இரண்டாவது போட்டியில் அடைந்த தோல்வியில்  இருந்து சில பாடங்கள் கற்றோம், தவறுகளை சரி செய்து கொண்டதால் மட்டுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற முடிந்தது. அடுத்ததாக நடைபெற உள்ள வங்கதேச அணியுடனான தொடரிலும் இதே போன்று சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.



  • SHARE

    விவரம் காண

    டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

    டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

    பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

    பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

    பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

    பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

    ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

    ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

    அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

    புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...