சும்மா இஷ்டத்துக்கு பேசாதீங்கடா; வெறுப்பாகியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 1

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஆடுகளத்தை விமர்சித்து வருபவர்களுக்கு ரோஹித் சர்மா பதில் கொடுத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது.

சும்மா இஷ்டத்துக்கு பேசாதீங்கடா; வெறுப்பாகியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 2

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அக்‌ஷர் பட்டேலின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அரைசதம் அடித்து கைகொடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 145 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

சும்மா இஷ்டத்துக்கு பேசாதீங்கடா; வெறுப்பாகியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 3

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (19), ஸ்டோக்ஸ்(25) மற்றும் ஓலி போப் (12) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன் கூட தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெறும் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி, விக்கெட்டை இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

சும்மா இஷ்டத்துக்கு பேசாதீங்கடா; வெறுப்பாகியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 4

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அதிமான பாராட்டுக்கள் குவிந்தாலும், மறுமுனையில் இரண்டு நாளில் டெஸ்ட் போட்டி நிறைவடைவது ஏற்று கொள்ள முடியாத விசயம் என்றும், பிட்ச்சின் தன்மை மிக மோசமாக இருந்ததாகவும் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.

முன்னாள் இந்திய வீரர்கள் சிலரே அகமதாபாத் ஆடுகளத்தை விமர்சிக்கும் வகையில் பேசி வரும் நிலையில், ஆடுகளத்தை விமர்சித்து வருபவர்களுக்கு ரோஹித் சர்மா சரியான பதில் கொடுத்துள்ளார்.

சும்மா இஷ்டத்துக்கு பேசாதீங்கடா; வெறுப்பாகியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 5

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “பிட்ச் மோசமான பிட்ச்செல்லாம் இல்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நேராக வந்த பந்துக்குத்தான் ஆட்டமிழந்தனர். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்களும் தான் தவறிழைத்தோம். ஆனால் பிட்ச் மோசமானதல்ல. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பேட்டிங் ஆட சிறந்த பிட்ச் இது. பேட்ஸ்மேன்களால் ஸ்கோர் செய்ய முடிந்ததையும் நாம் பார்த்தோம். கவனக்குவிப்புத்தான் இந்த ஆடுகளத்தில் முக்கியம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கடும் விமர்ச்சனங்களை சந்தித்து வரும் இதே பிட்ச்சில் தான் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி ஒரு அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *