மீண்டும் ஒரு முறை சர்வதேச ஒருநாள் போட்டியில் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடினார் மகேந்திர சிங் தோனி. இதனால் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் மகேந்திர சிங் தோனியை அணியில் வைத்துள்ளார் என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி பெற்றது இந்தியா. ஆனால், இந்திய அணி நடுவரிசையின் முதுகெலும்பு தோனி தான் என அவர் மேலும் ஒருமுறை நிரூபித்தார். இந்திய அணி 12 ஓவரில் 4 விக்கெட் இழந்து 16 ரன்னில் இருக்கும் போது, பேட்டிங் விளையாட வந்தார் தோனி. அவர் வந்ததும் அணியின் ஸ்கோர் 16/5 என ஆனது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 29 ரன் மட்டுமே எடுத்து திணறிக்கொண்டு இருந்தது. தோனியை தவிர பேட்டிங் விளையாடுபவர்கள் அனைவரும் அவுட் ஆனார்கள்.

இந்திய அணி ஆல்-அவுட் ஆகி விடுமோ என்று அனைவரும் பயந்து கொண்டிருந்தார்கள், அப்போது தான் தோனி தான் யாரென மீண்டும் நிரூபித்தார். குல்தீப் யாதவ் – தோனி ஜோடி 41 ரன் சேர்த்தது. அதன் பிறகு ஜேஸ்ப்ரிட் பும்ரா மற்றும் யுஸ்வேந்த்ர சஹாலை வைத்து ரன் சேர்த்தார் தோனி. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 100க்கு மேல் சென்றது. 87 பந்தில் 65 ரன் அடித்தார் தோனி, அதில் 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஆனால், அவரது உழைப்பு வீணாக சென்றது. அந்த எளிதான இலங்கை எட்டிய இலங்கை அணி 1-0 என்ற நிலையில் இந்த ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
“பயங்கரமாக விளையாடினார் மகேந்திர சிங் தோனி. தேவை படும்போது அடித்து விளையாடினார், தேவை படும்போது பொறுமையாக விளையாடினார். இதனால் தான் விராட் கோலி இன்னும் அவரை நம்பியுள்ளார்,” என சவுரவ் கங்குலி கூறினார்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
“ஒரு பக்கம் போட்டியாக சென்று விட்டது. இந்த அணி மனிஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களுடன் சென்றது. இங்கிருந்து தான் இந்திய அணி நிறைய கற்றுக்கொள்ளும்,” எனவும் அவர் கூறினார்.
“ரஹானே, ராகுல் போன்ற வீரர்கள் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவேண்டும். ஐயர் மற்றும் பாண்டே ஆகியோர் சிறந்தவர்கள் தான், ஆனால் இந்த நேரத்தில் ராகுல் மற்றும் ரஹானே தான் சிறந்தவர்கள்,” என கங்குலி தெரிவித்தார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 13ஆம் தேதி மொஹாலியில் நடக்கவுள்ளது. இந்த தொடரை வெல்ல இந்திய அணி மீதம் உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.