அவர் இல்லாமல் இந்திய அணி நிச்சயம் திணறும்; முன்னாள் வீரர் உறுதி !! 1

ஜஸ்ப்ரிட் பும்ராஹ் இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடனான அடுத்த போட்டியில் நிச்சயம் திணறும் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அவர் இல்லாமல் இந்திய அணி நிச்சயம் திணறும்; முன்னாள் வீரர் உறுதி !! 2

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

எளிதாக வெற்றி பெற வேண்டிய மூன்றாவது போட்டியை பல கேட்சுகளை தவற விட்டதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.இதானால் ப்ரிஸ்பேனில் நடக்கும் கடைசி போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிற்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அவர் இல்லாமல் இந்திய அணி நிச்சயம் திணறும்; முன்னாள் வீரர் உறுதி !! 3

இரு அணிகளும் தொடரை கைப்பற்றும் முனைப்போடு கடும் பயிற்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது,இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் பங்கெடுக்கமாட்டார் இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.இதனால் இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் ஷர்தால் தாகுர் அல்லது டி நடராஜன் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்குவார்கள் என்று எதிற்பார்க்கபடுகிறது.

பும்ராஹ் இல்லத இந்திய அணி பெரும் நெருக்கடியை சந்திக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ப்ராட் ஹாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது” முகமது சிராஜ்,மற்றும் நவ்தீப் சைனி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கின்றானர்.

அவர் இல்லாமல் இந்திய அணி நிச்சயம் திணறும்; முன்னாள் வீரர் உறுதி !! 4

அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளாரான முகமது ஷமி இல்லாத நிலையிலும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ப்ரிஸ்பேனில் நடக்கும் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெரும் வெறியோடு உள்ளது.

அதேசமயத்தில் இந்திய அணி தனது பலத்தை மீண்டும் நிருபிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் நட்ச்சத்திர வீரரான பும்ராஹ் காயம் காரணமாக இடம்பெறவில்லை,பும்ராஹ் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்று கூறினார்”.

அவர் இல்லாமல் இந்திய அணி நிச்சயம் திணறும்; முன்னாள் வீரர் உறுதி !! 5

பல முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி சிறப்பக செயல்பட்ட நிலையில் பும்ராஹ் இல்லாமலும் சிறப்பக செயல்ப்படுமா.? என்ற எதிற்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *