நடக்க போறத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு; புலம்பும் இங்கிலாந்து வீரர் !! 1

நடக்க போறத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு; புலம்பும் இங்கிலாந்து வீரர்

ஆளே இல்லாத மைதானத்தில் விண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பது பயமாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஓலி போப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு மத்தியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. கொரோனா பீதியால் இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்ட உள்ளது.

நடக்க போறத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு; புலம்பும் இங்கிலாந்து வீரர் !! 2

இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் முதன்முறையாக விளையாட உள்ளதை நினைத்தால் தனக்கு நடுக்கமாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஓலி போப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓலி போப் பேசியதாவது;

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போதும் பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம், ராணுவமே நமக்குத் துணையாக இருப்பது போல் உணர்வை ஒவ்வொரு வீரர்களுக்கும் கொடுக்கும். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளின் போதும் இங்கிலாந்து மைதானங்களில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

நடக்க போறத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு; புலம்பும் இங்கிலாந்து வீரர் !! 3

ஒரு பார்வையாளர் கூட இல்லாத மைதானத்தில் எப்படி விளையாடப் போகிறோம் என அடிக்கடி யோசித்துப் பார்ப்பேன். போட்டி தொடங்கி சில மணி நேரங்கள் எனக்கு நடுக்கம் இருக்கும் என நினைக்கிறேன். எனினும், இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு நிச்சயம் சிறப்பாக நாங்கள் விளையாடுவோம்” என்று ஓலி போப் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி;

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜாக் க்ராவ்லி, ஜோ டென்லி, ஓலி போப், டாம் சிப்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *