ரோஹித் சர்மா வேண்டாம்... இவர் துவக்க வீரராக களமிறங்குவது தான் இந்திய அணிக்கு நல்லது; வித்தியாசமான ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியின் துவக்க வீரராக யாரை களமிறக்கலாம் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ரோஹித் சர்மா வேண்டாம்... இவர் துவக்க வீரராக களமிறங்குவது தான் இந்திய அணிக்கு நல்லது; வித்தியாசமான ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 208 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் மிக மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.

ரோஹித் சர்மா வேண்டாம்... இவர் துவக்க வீரராக களமிறங்குவது தான் இந்திய அணிக்கு நல்லது; வித்தியாசமான ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

முதல் டி.20 போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 23ம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் இந்த போட்டி மீது மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தும், இரு அணிகள் இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்தும் பல்வேறு விசயங்களை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா, பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியின் துவக்க வீரராக யாரை களமிறக்கலாம் என்பது குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

ரோஹித் சர்மா வேண்டாம்... இவர் துவக்க வீரராக களமிறங்குவது தான் இந்திய அணிக்கு நல்லது; வித்தியாசமான ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “துவக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா சற்று தடுமாறுவதை போன்று தெரிகிறது. ஆசிய கோப்பை தொடரிலும் ரோஹித் சர்மா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. எனவே ரோஹித் சர்மாவிற்கு பதிலாக விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்கனால் அது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். கே.எல் ராகுலும், விராட் கோலியும் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும். ரோஹித் சர்மாவால் மிடில் ஆர்டரிலும் சிறப்பாக விளையாட முடியும், விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கிவிட்டு ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் களமிறங்கினால் அது இந்திய அணியின் பேட்டின் ஆர்டருக்கும் கூடுதல் வலு சேர்க்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.