என்ன இருந்தாலும் அது ரொம்ப கஷ்டம் தான்; ஸ்டீவ் ஸ்மித் வேதனை

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் இந்தியாவில் நடைபெறாதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அணி நிர்வாகம், ஒளிபரப்பு நிறுவனம், பங்குதாரர்கள் போன்ற பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அக்டோபர் 26 ஆம் தேதியில் துவங்கியது ஐபிஎல் தொடரை செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து நவம்பர் எட்டாம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

என்ன இருந்தாலும் அது ரொம்ப கஷ்டம் தான்; ஸ்டீவ் ஸ்மித் வேதனை !! 2

கொரோனா காரணமாக எந்த எந்த நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா வீரர்கள் இந்த தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், ஐ.பி.எல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித், ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறாதது ஏமாற்றம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்ன இருந்தாலும் அது ரொம்ப கஷ்டம் தான்; ஸ்டீவ் ஸ்மித் வேதனை !! 3

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது;

எவ்விதமான ஆடுகளங்களிலும் விளையாடுவதற்கு ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தயாராக இருக்க வேண்டும். ஐ.பி.எல் தொடர் நடைபெற இருக்கும் துபாய் ஆடுகளங்களும், இந்தியாவின் ஆடுகளங்கள் போன்று தான். எங்களில் சில வீரர்கள் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் துபாயில் விளையாடி அணுபவம் பெற்றவர்களாக உள்ளனர். நிச்சயமாக ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *