பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தமிழக வீரர் அஸ்வின் !! 1

பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தமிழக வீரர் அஸ்வின்

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை  கோடிகளை குவித்து எடுத்து கொண்டன.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பெற்று ஐ.பி.எல் தொடரில் சாதிக்க காத்துள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி கேப்டனுக்கு பதவிக்கு சரியான ஆள் இல்லாமல் தவித்து வந்தது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தமிழக வீரர் அஸ்வின் !! 2

இந்நிலையில் இந்த தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளதாக கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள போதிலும் பஞ்சாப் அணி அஸ்வினை கேப்டனாக நியமித்துள்ளது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தமிழக வீரர் அஸ்வின் !! 3

இது குறித்து பேசிய அஸ்வின், இது எனக்கு கிடைத்த கவுரமாகவும் பெருமையகவும் கருதுகிறேன். கேப்டன் என்பதால் என் மீது கூடுதல் அழுத்தம் இருக்கும் என்று கருதவில்லை. என்னால் முடிந்த வரை சிறப்பாக விளையாடி அணியையும் சிறப்பாக வழிநடத்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வினை, இந்த முறை தனது அணியில் கடும் போட்டிக்கு பின் எடுத்த பஞ்சாப் அணி அவரை கேப்டனாகவும் நியமித்துள்ளது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *