வெற்றிக்கு இது தான் காரணம்; ஆரோன் பின்ச் பெருமிதம்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 100 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஐந்து போட்டிகள் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேசியதாவது;

இதை எங்களாலே நம்ப முடியவில்லை. எங்களின் போராட்டம் ஆச்சரியமாக இருந்தது. ஒரு கேப்டனாக எங்களது வீரர்களின் செயல்பாடுகள் குறித்து பெருமை கொள்கிறேன். பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே இந்த தொடரை எங்களால் வெற்றி பெற முடிந்தது. சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா போன்ற தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுவது சவாலான விசயம், இருந்தாலும் எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இது ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியே” என்றார். • SHARE

  விவரம் காண

  மும்பை vs டெல்லி: “நான் எந்த பொசிஷனிலும் இறங்கி செய்வேன்” ஆட்டநாயகன் பண்ட்!!

  27 பந்துகளில் மும்பை அணியை துவம்சம் செய்த பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ்...

  யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

  12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

  ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

  மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...