இவ்வளவு மோசமான விளையாட்டை நான் பார்த்தது இல்லை; ஆஸ்திரேலிய பயிற்சியாளர் வேதனை !! 1
இவ்வளவு மோசமான விளையாட்டை நான் பார்த்தது இல்லை; ஆஸ்திரேலிய பயிற்சியாளர் வேதனை

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 50 ஓவரில் 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது. பின்னர், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 239 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இவ்வளவு மோசமான விளையாட்டை நான் பார்த்தது இல்லை; ஆஸ்திரேலிய பயிற்சியாளர் வேதனை !! 2

இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் இந்த ஆட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. அவர்கள் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். நான் இதுபோன்ற எந்தவொரு ஆட்டத்தையும் இதுபோன்ற பார்த்ததில்லை.

இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்டத்தை விட மிகக்கடினமாக இருக்காது. முதல் மூன்று வீரர்கள் துவம்சம் செய்துவிட்டனர்.

இவ்வளவு மோசமான விளையாட்டை நான் பார்த்தது இல்லை; ஆஸ்திரேலிய பயிற்சியாளர் வேதனை !! 3

அணியில் அதிரடி மாற்றம் கொண்டு வர நான் விரும்பவில்லை. நாங்கள் அணியை ஏதாவது ஒரு வகையில் கட்டமைக்க வேண்டும். நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஏராளமான மாற்றத்தை நோக்கி செல்ல முடியாது. நாதன் லயன் அதிகமான போட்டியில் விளையாடியுள்ளார். அவர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

தொடர்ந்து அசிங்கப்படும் ஆஸ்திரேலியா;

கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த அணி ஆஸ்திரேலியா. ஒருநாள் போட்டியில் 1999, 2003 மற்றும் 2007-ல் தொடர்ச்சியாக மூன்று முறை உலகக்கோப்பையை கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்தது. ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத் ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர், அந்த அணி தனித்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தது.

இவ்வளவு மோசமான விளையாட்டை நான் பார்த்தது இல்லை; ஆஸ்திரேலிய பயிற்சியாளர் வேதனை !! 4

தற்போது முற்றிலும் துவண்டுவிட்டது. சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டம் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 481 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *