சிட்னி சிக்ஸர்ஸ் மூலம் ஜேசன் ஹோல்டருக்கு அடித்த ஜாக்பாட்!அடுத்தடுத்த ஒப்பந்தம் 1

சிட்னி சிக்ஸர்ஸ் மூலம் ஜேசன் ஹோல்டருக்கு அடித்த ஜாக்பாட் !அடுத்தடுத்த ஒப்பந்தம். ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் டி20 லீக் தொடரில் இந்திய அணியின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சன் ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர்.

ஜேசன் ஹோல்டர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது 29 வயதான அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதன்முதலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. இதன் காரணமாக இளம் வீரராக இருந்த ஜேசன் ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தற்போது வரை 43 டெஸ்ட் போட்டிகளிலும் 115 ஒருநாள் போட்டியிலும் 17 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இவை அனைத்தையும் சேர்த்து 4000 ரன்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார் ஜேசன் ஹோல்டர். ஒருநாள் போட்டிகளிலும் 9 அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

சிட்னி சிக்ஸர்ஸ் மூலம் ஜேசன் ஹோல்டருக்கு அடித்த ஜாக்பாட்!அடுத்தடுத்த ஒப்பந்தம் 2

ஐபிஎல் தொடரில் இவர் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை அவ்வப்போது மாற்று வீரராக களம் இறங்கப்படுவார். சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளராக இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு மாற்று வீரராக ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனியாளாக நின்று நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

மேலும் 6 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஜேசன் ஹோல்டர் இந்த ஆட்டத்தை பார்த்த ‘சிட்னி சிக்ஸர்ஸ் அணி’ தற்போது இவரை தங்கள் அணிக்கு ஆடுவதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட போகிறது.

சிட்னி சிக்ஸர்ஸ் மூலம் ஜேசன் ஹோல்டருக்கு அடித்த ஜாக்பாட்!அடுத்தடுத்த ஒப்பந்தம் 3

அந்த நேரத்தில் வருகிற 10ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் டி20 லீக் துவங்கப் போகிறது. இந்த நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3 போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அடிலெய்ட் மைதானத்தில் டிசம்பர் 20ஆம் தேதியும் மெல்பேர்ன் மைதானத்தில் 26-ம் தேதியும் மீண்டும் அடிலெய்ட் மைதானத்தில் 29ம் தேதியும் விளையாடும் போட்டிகளில் ஜேசன் ஹோல்டர் அந்த அணிக்காக விளையாட போகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *