சூப்பர் ஓவர் இருக்கட்டும்,... ஆனால் இந்த விதி வேண்டாம்! மாற்றிவிடுங்கள்! ஐசிசிக்கு கோரிக்கை வைத்த காலிஸ் 1

தென்ஆப்பிரிக்காவின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான கல்லீஸ், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடரை பிரபலப்படுத்தும் வகையில் முன்னாள் ஜாம்பவான்களை உலகக்கோப்பைக்கான தூதராக ஐசிசி நியமித்திருந்தது. அதில் ஒருவர் கல்லீஸ்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பவர்பிளே விதிமுறையால் பந்து வீச்சாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் வகையில் விதிமுறையை மாற்ற வேண்டும் என்று கல்லீஸ் தெரிவித்துள்ளார்.சூப்பர் ஓவர் இருக்கட்டும்,... ஆனால் இந்த விதி வேண்டாம்! மாற்றிவிடுங்கள்! ஐசிசிக்கு கோரிக்கை வைத்த காலிஸ் 2

இதுகுறித்து கல்லீஸ் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓவர் முதல் 40 ஓவர் வரை நான்கு வீரர்கள் மட்டுமே உள்வட்ட எல்லைக்கு வெளியே நிற்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு சாதகமான பிளாட் ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு ஐந்து பீல்டர்கள் வெளியே நிற்கலாம் என்ற பழைய முறையை கொண்டு வர வேண்டும். பந்து வீச்சாளர்கள் எத்தனை வீரர்கள் அவுட் பீல்டிங் பகுதியில் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆடுகளங்கள் 350 ரன்களுக்கு மேல் அடிப்பதற்கு சாதகமானதாக இருக்கக்கூடாது’’ என்றார்.

Cricket, India, Sri Lanka, Virat Kohli, Records
DURBAN, SOUTH AFRICA – DECEMBER 29: Jacques Kallis of South Africa celebrates his 45th century in his final test match during day 4 of the 2nd Test match between South Africa and India at Sahara Stadium Kingsmead on December 29, 2013 in Durban, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

இந்நிலையில் உலக்கோப்பை ஓவர் த்ரோ சம்பவம் நடந்த தருணத்தில் களத்திலேயே கைகளை உயர்த்தி பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டதாகவும், நடுவர்கள் பவுண்டரி வழங்கிய முடிவை திரும்பப் பெறுமாறும் வேண்டுகோள் விடுத்ததாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை யில்,“கிரிக்கெட் நாகரீகம் என்ன வெனில் ஸ்டெம்புக்கு த்ரோ செய்யப் படும் பந்து நம் மேல் பட்டு பீல்டிங் பகுதியை நோக்கி சென்றால் ரன்கள் ஓட முடியாது. ஆனால் எல்லைக் கோட்டை கடந்துவிட்டால் அது நான்கு ரன்கள் தான். இது விதி, இதனை நாம் ஒன்றும் செய்ய முடியாது.சூப்பர் ஓவர் இருக்கட்டும்,... ஆனால் இந்த விதி வேண்டாம்! மாற்றிவிடுங்கள்! ஐசிசிக்கு கோரிக்கை வைத்த காலிஸ் 3

இறுதிப் போட்டி முடிவடைந்ததும் பென் ஸ்டோக்ஸை, மைக்கேல் வான் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் சென்று ‘ஓவர் த்ரோவில் பவுண்டரி சென்ற 4 ரன்களை எண்ணிக்கையிலிருந்து எடுக்க முடியுமா? எங்களுக்கு அந்த ரன்கள் வேண்டாம்’ என்று கூறி யுள்ளார். இதை மைக்கேல் வான் என்னிடம் தெரிவித்தார். விதி களின் படி பென் ஸ்டோக்ஸ் வைத்த கோரிக்கை ஏற்க முடியாத ஒன்று.

இது வீரர்கள் மத்தியிலும் பேசப் பட்டுள்ளது. பந்து பேட்ஸ்மேனை தாக்கிய பிறகு எங்கு சென்று விழுந் தாலும் அதனை ‘டெட்’ பால் என்று அறிவிக்க வேண்டும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *