ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு சர்ஜரி ! 6 வாரத்திற்கு விளையாடமாட்டாராம் !
3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்து இருந்தனர். ஸ்டீவ் ஸ்மித்(131), புகோவ்ஸ்கி (62) மற்றும் லாபுசாக்னே (91) ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதில் ஸ்மித் 81, மார்னஸ் 73 மற்றும் கிரீன் 84 ரன்களைக் குவித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆல் ரவுண்டர் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. வேகமாக வந்த பந்து ஜடேஜாவின் கையில் பட்டதால் காயம் ஏற்பட்டது. காயத்தின் ஏற்பட்ட வலியால் துடித்துப் போன ஜடேஜா சிறிது நேரம் ஓய்வு ஓய்வெடுத்தார். அப்போது ஜடேஜா பெயின் கில்லர் ஊசியை போட்டுக் கொண்டார். ஜடேஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்தனர்.

அந்த ஸ்கேனில் ஜடேஜாவிற்கு எலும்பு விலகல் ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதன் காரணமாக ஜடேஜா இன்னும் 6 வாரங்களுக்கு விளையாடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஜடேஜாவுக்கு விலகிய எலும்பினை சரி செய்யும் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது ஜடேஜா சர்ஜரி செய்த பின் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
