சென்னை அணியின் வெற்றி சூத்திரம் இதுதான்..,தோனி இல்லை உண்மையை உடைத்த ஜடேஜா 1

சென்னை அணியின் வெற்றி சூத்திரம் இதுதான்… தோனி இல்லை உண்மையை உடைத்த ஜடேஜா

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

மூன்று முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனை விட இந்த சீசனில் அதிரடியாக விளையாடி வருகிறது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 12 புள்ளிகள் மட்டும் பெற்றதால் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

சென்னை அணியின் வெற்றி சூத்திரம் இதுதான்..,தோனி இல்லை உண்மையை உடைத்த ஜடேஜா 2

இதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் பிரச்சனை இருந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே டெல்லிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும். இதன்பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த சீசனில் மொயின் அலி, சுரேஷ் ரெய்னா வருகையால் சிஎஸ்கேவின் பேட்டிங் பிரச்சனை முடிந்தது. குறிப்பாக மொயின் அலி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செய்லபட்டு வருகிறார். 

சென்னை அணியின் வெற்றி சூத்திரம் இதுதான்..,தோனி இல்லை உண்மையை உடைத்த ஜடேஜா 3

இந்நிலையில், சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா தங்களது தொடர்ச்சியான வெற்றிக்கு இதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார். அவர் கூறுகையில் “இந்த சீசனில் சிஎஸ்கே பேட்ஸ்மன்கள் தங்களது கடைமையை சிறப்பாக செய்து வருகிறார்கள். இதன் காரணமாக எங்களால் நல்ல ஸ்கோரை பெற முடிகிறது. இதுவே எங்களது வெற்றிகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *