காயமடைந்த இவர் கண்டிப்பாக டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவார் ! - சிஎஸ்கே அதிகாரி உறுதி 1

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

மொயின் அலி தொடர்பான மற்றொரு சர்ச்சை, இதற்கு இந்த பெண் தான் காரணம் ! யார் இவர் ? 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது. மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

காயமடைந்த இவர் கண்டிப்பாக டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவார் ! - சிஎஸ்கே அதிகாரி உறுதி 2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விற்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வு பெற்று வந்தார். தற்போது ரவீந்திர ஜடேஜா உடல்நலம் முழுவதும் குணமடைந்து விட்டதாக சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

தற்போது வலைப்பயிற்சியில் ஜடேஜா அதிரடியாக விளையாடி வருகிறார். இதனால் இவர் கண்டிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என்று அறிவித்திருக்கிறார் இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கிறது. 

காயமடைந்த இவர் கண்டிப்பாக டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவார் ! - சிஎஸ்கே அதிகாரி உறுதி 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *