பவுலிங் வீக்கா இருக்குன்னு தெரிஞ்சும், ஏன் ஜஸ்ப்ரிட் பும்ராவை ஆடவைக்கவில்லை? - காரணத்தை கூறிய ஹர்திக் பாண்டியா! 1

முதல் டி20 போட்டியில் ஏன் பும்ராவை ஆடவைக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் அடித்தது.

துவக்க வீரர் கேஎல் ராகுல் மிக சிறப்பாக விளையாடி 55 ரன்கள் விலாசினார். அதன் பிறகு மிடில் ஓவர்களில் சூரியகுமார் யாதவ் 46 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். பினிஷிங் ரோல் செய்த ஹர்திக் பாண்டியா வந்த கணம் முதல் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விலாசி இந்திய அணியின் ஸ்கோரை மலவன உயர்த்தினார். இவர் 30 பந்துகளில் 71 ரன்கள் அடித்தது மிகப் பெரிய வித்தியாசமாக பார்க்கப்பட்டது.

பவுலிங் வீக்கா இருக்குன்னு தெரிஞ்சும், ஏன் ஜஸ்ப்ரிட் பும்ராவை ஆடவைக்கவில்லை? - காரணத்தை கூறிய ஹர்திக் பாண்டியா! 2

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய கிரீன், அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு 30 பந்துகளில் 61 ரன்கள் விலாச, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் சட்டென்று மேலே சென்றது. ஸ்மித் 35 ரன்கள் அடித்து வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்து வெளியேறினார். இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ரன்களை கட்டுப்படுத்தி வந்த இந்தியாவிற்கு, கீழ் வரிசையில் களமிறங்கிய மேத்தியு வேட் அச்சுறுத்தலாக திகழ்ந்தார். இவர் 21 பந்துகளில் 45 ரன்கள் விலாசி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது.

ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. ஹர்ஷல் பட்டேல், பும்ரா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த தொடரில் ஜஸ்ட்பிரீத் பும்ரா இருந்தும் ஏன் அவரை எடுக்கவில்லை? என்ற கேள்விகள் எழுந்து வந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக ஹார்திக் பாண்டியா பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்,

பவுலிங் வீக்கா இருக்குன்னு தெரிஞ்சும், ஏன் ஜஸ்ப்ரிட் பும்ராவை ஆடவைக்கவில்லை? - காரணத்தை கூறிய ஹர்திக் பாண்டியா! 3

“பும்ரா இந்திய அணிக்குள் இருந்தால் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். அவர் சமீபத்தில் தான் காயத்திலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு இன்னும் சில காலம் ஓய்வளிப்பது நல்லது என்று அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர் இந்திய அணிக்குள் இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தனது பங்களிப்பை கொடுப்பார். கேப்டன் மற்றும் கோச் ஓய்வெடுக்கட்டும் என கூறியதும் சரியானதாக படுகிறது. மேலும் இந்திய அணியின் பந்துவீச்சு சரியில்லை என்று இங்கும் அங்குமாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலுமாக உண்மை இல்லை. நமது வீரர்கள் மிகச் சிறப்பானவர்கள் என்பதை விரைவில் உணர்த்துவோம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published.