கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய மிக முக்கிய பந்துவீச்சாளர் !! 1

இங்கிலாந்து அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்ப்ரிட் பும்ராஹ் விலகியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால், நான்கு போட்டிகள் கொண்ட தொடரானது 2-2 என்ற கணக்கில் சமமாகவிடும் என்பதால் இரு அணிகளும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய மிக முக்கிய பந்துவீச்சாளர் !! 2

இந்தநிலையில், கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து, இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் விலகியுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பதிவில் “சொந்தக் காரணங்களுக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் விளையாட முடியாத சூழல் இருப்பதாகவும் அதனால் அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பும்ரா கேட்டுக்கொண்டார். அதனால் கடைசிப் போட்டியில் அவர் விளையாடமாட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய மிக முக்கிய பந்துவீச்சாளர் !! 3
SYDNEY, AUSTRALIA – JANUARY 10: Jasprit Bumrah of India reats after bowling an over during day four of the Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 10, 2021 in Sydney, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி;

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ரவிச்சந்திர அஸ்வின், சட்டீஸ்வர் புஜாரா, மாயன்க் அகர்வால், சுப்மன் கில், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிரா, உமேஷ் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *