பும்ராஹ்வை விட இவர் தான் மிக சிறந்த பந்துவீச்சாளர்; புகழ்ந்து பேசிய அஜித் அகார்கர் !! 1

தன்னை பொறுத்தவரையில் முகமது ஷமி தான் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

பும்ராஹ்வை விட இவர் தான் மிக சிறந்த பந்துவீச்சாளர்; புகழ்ந்து பேசிய அஜித் அகார்கர் !! 2

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான அஜித் அகார்கர், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக மாயன்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாத அகார்கர், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர் சுப்மன் கில்லை தனது ஆடும் லெவனில் தேர்வு செய்யவில்லை.

பும்ராஹ்வை விட இவர் தான் மிக சிறந்த பந்துவீச்சாளர்; புகழ்ந்து பேசிய அஜித் அகார்கர் !! 3

அதே போல் மிடில் ஆர்டரில் சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோரை தேர்வு செய்துள்ள அகார்கர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

அதே போல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரையுமே தேர்வு செய்துள்ள அகார்கர், பந்துவீச்சாளர்கள் வரிசையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

மேலும் பேசிய அஜித் அகார்கர், தன்னை பொறுத்தவரையில் முகமது ஷமி தான் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

பும்ராஹ்வை விட இவர் தான் மிக சிறந்த பந்துவீச்சாளர்; புகழ்ந்து பேசிய அஜித் அகார்கர் !! 4

இது குறித்து அகார்கர் பேசுகையில், “இந்திய டெஸ்ட் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. பும்ரா வேகமாக வளர்ந்து வந்தாலும் என்னைப் பொறுத்தவரை முகமது ஷமிதான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளர். உலகின் எந்தவொரு நாட்டிலும் விக்கெட் எடுக்க கூடிய ஆற்றல் படைத்தவர் ஷமி மட்டுமே” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *