14வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட தேர்வு செயாதது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெயவர்தனே கருத்து தெரிவித்திருக்கிறார்.

2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

“இதனால்தான் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை” - உண்மையை கூறிய குமார் சங்கக்கரா ! 2

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். ஆனால் ஆரோன் பின்ச் போன்ற அனுபவ வீரர்கள் பலர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இதுபோக சில வீரர்கள் டிரேடிங் மூலம் இரு அணிகளுக்கிடையே மாற்றப்பட்டிருக்கின்றனர். 

“இதனால்தான் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை” - உண்மையை கூறிய குமார் சங்கக்கரா ! 3

கடந்த சீசனில் விளையாடிய இசுரு உடானா, திசாரா பெரேரா ஆகிய இலங்கை வீரர்கள் ஒருவர் கூட இந்த ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இலங்கை அணியின் ஜாம்பவானான ஜெயவர்தனே கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து  ஜெயவர்தனே பேசுகையில் “ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்கள் ஒருவர்கூட இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த ஏலத்தில் 20 வெளிநாட்டு வீரர்களை எடுக்க மட்டுமே இடம் இருந்தன. அனைத்து ஐபிஎல் அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களையும் ஆல்ரவுண்டர்களையும் மட்டும் எடுக்க முயற்சி செய்தனர். இதுப்போன்ற சிறந்த இலங்கை வீரர்கள் இல்லாததே காரணம்” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு இலங்கை வீரர்கள் தகுதியற்றவர்கள் ; ஐபிஎல் ஏலத்தில் தவிர்க்கப்பட இதுதான் காரணம் ! - ஜெயவர்தனே ஓபன் டாக் 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *