விலை போகாத ஜோ ரூட்… முதல் முறையே சோதனையை சந்திக்கும் சிறந்த பேட்ஸ்மேன் !! 1
விலை போகாத ஜோ ரூட்… முதல் முறையே சோதனையை சந்திக்கும் சிறந்த பேட்ஸ்மேன்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டை, ஐ.பி.எல் தொடரில் எந்த அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

விலை போகாத ஜோ ரூட்… முதல் முறையே சோதனையை சந்திக்கும் சிறந்த பேட்ஸ்மேன் !! 2

 

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் இந்த தொடர் மூலம் முதன்முறையாக ஐ.பி.எல் தொடரில்  கால் பதிக்க காத்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், தனக்கான அடிப்படை விலையாக 1.5 கோடி ரூபாயை நிர்ணயம் செய்திவிலை போகாத ஜோ ரூட்… முதல் முறையே சோதனையை சந்திக்கும் சிறந்த பேட்ஸ்மேன் !! 3ருந்தார். இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *